×

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக மோசடி ஒருவர் கைது

சிவகங்கை, ஜூன் 12:  வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்புவதாக பண மோசடி செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடியை சேர்ந்தவர் வைரவபாலன். இவர் காரைக்குடியில் வெளி நாடுகளுக்கு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் சவேரியார்பட்டிணத்தை சேர்ந்த சேவியர் மகன் பயஸ்ரூபன்(29), தஞ்சாவூரை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஸ்குமார் ஆகிய இருவரும் தங்கள் மூலம் வெளிநாட்டிற்கு ஆள் அனுப்பும் படியும், அனுப்பும் ஆட்களுக்கு நல்ல வேலை வாங்கித்தரப்படும் என்றும் கூடுதல் கமிசன் தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதை நம்பிய வைரவபாலன் 17 நபர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப கடந்த 30.3.2018ல் இருந்து 7.1.2019 வரையில் ரூ.31 லட்சத்து 62ஆ யிரத்தை பயஸ்ரூபன் மற்றும் சந்தோஸ்குமாரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற இருவரும் கூறியபடி விசா எடுக்காமலும், பணத்தை தராமலும் இருந்துள்ளனர். இது குறித்து வைரவபாலன் சிவகங்கை மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணை செய்த போலீசார் பஸ்ரூபன், சந்தோஸ்குமார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பயஸ்ரூபனை கைது செய்தனர்.

Tags : fraudsters ,
× RELATED 420 மோசடிப் பேர்வழிகள் வரும் தேர்தலில் 400...