×

இன்று முதல் அங்கன்வாடி எல்கேஜி ஆசிரியைகளுக்கு பயிற்சி

தேனி, ஜூன் 12: தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் துவங்கப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்க உள்ளது. தமிழ்நாடு அரசு தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை துவக்கியுள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளியுடன் இணைந்துள்ள 32 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேரும் மாணவ, மாணவியர்களுக்கு மாண்டோசோரி முறையில் பாடம் நடத்தப்பட உள்ளது. இம்மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்த அரசு ஆரம்ப பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளில் கூடுதல் பணியிடத்தில் உள்ள ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியைகளுக்கு கேஜி வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு மாண்டோசோரி முறையில் பாடம் நடத்துவது எப்படி என்பது குறித்த பயிற்சி தேனி, அல்லிநகரத்தில் உள்ள வட்டார வளமையத்தில் இன்று முதல் வருகிற நாளை மறுதினம் வரை நடக்க உள்ளது.

Tags : teachers ,Anganwadi Elgji ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...