உழவர் சந்தை பாதுகாவலர்கள் கலெக்டரிடம் மனு மாவட்டம் வன அதிகாரியின் வீடு புகுந்து நகை பறிப்பு

பெரியகுளம், ஜூன் 12: பெரியகுளம் அருகே வன அதிகாரியின் வீடு புகுந்து நகை பறித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியகுளம் அருகே என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் பாரஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம்  இரவு  இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் இவரது மகள் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்துக் கொண்டு பக்கத்து அறையில் படுத்திருந்த ரெங்கநாதனின் மனைவி வனஜாவின் செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வனஜா தனது செயினை கையில் பிடித்துக்கொண்டதால் பாதி செயினை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இது குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

× RELATED டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை