×

நோயாளிகள் அலைக்கழிப்பு கம்பம் பகுதிகளில் வனத்துறையால் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுமா?

கம்பம், ஜூன் 12: கம்பம் பகுதிகளில் வனத்துறையினரால் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பம் பகுதிகள் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தின் கீழ் அமைந்துள்ளது. பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக அதிகமானஅளவில் விளைநிலங்கள் பிளாட்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அன்றைய காலங்களில் மழை தரும் மரங்களாக இருந்த ஆலமரம், அரசமரம், வேம்பு, உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் மழைக்காலங்களில் கூட மழை பெய்வதில் பிரச்சனை உள்ளது. கம்பம் பகுதிகளை சுற்றிலும் உள்ள கிராமங்களில் கூட மரங்கள் அதிகம் இல்லாத நிலை உள்ளது. இதனை வனத்துறையினர் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் மரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

எனவே வரும் தலைமுறையினருக்காக இலவசமாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்திட தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இயற்கை நலம் காக்க விரும்புபவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மரக்கன்றுகளை நடுவதற்கும், கன்றுகளை இலவசமாக வழங்கிடவும் வனத்துறை முன்வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறுகையில், கம்பம் பகுதிகளில் வனத்துறையினருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது இடங்களில் அதிகமான அளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் எதிர்கால சந்ததியினர் பெரிதும் பயன்பெறுவார்கள். இதற்கான நடவடிக்கையை மாவட்ட வனத்துறை அதிகாரி எடுக்கவேண்டும் என்றனர்.

Tags : areas ,Forest Department ,
× RELATED தேர்தல் பிரசாரத்தின் போது பாம்பை...