×

போடி மலைவாழ் மக்களுக்கு பட்டா

போடி, ஜூன் 12: போடி மேற்கு மற்றும் வடக்கு மலைப்பகுதிகளில் அகமலை, முதுவாக்குடி, சிரக்காடு, முட்டம் போன்ற மலைக்கிராம மக்களுக்கு பல வருடங்களாகவே பட்டா  கிடைக்காமல் இருந்தது. எனவே பட்டா வழங்க வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நான்கு நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது. இதில் மலைவாழ் மக்கள் திரண்டு வந்து பட்டா கேட்டு மனுக்கொடுத்தனர். அந்த மனு உடனடியாக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பட்டா வழங்கிட சாத்தியம் இருப்பதை சக அதிகாரிகள் விளக்கினர்.

இதையடுத்து கலெக்டர் பட்டா வழங்கிட உத்தரவிட்டார். வன உரிமை சட்டத்தின் கீழ் மலை கிராம மக்களுக்கு முதல் கட்டமாக முதுவாக்குடி கிராமத்தில் 26 குடும்பங்களுக்கு 25 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் வீடு கட்டிக் கொள்ளலாம் என உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆர்த்தி மற்றும் ரெகுலர் தாசில்தார் மணிமாறன் ஆகியோர் பட்டாக்களை வழங்கினர். தொடர்ந்து அடுத்தடுத்து ஒவ்வொரு மலைக்கிராம மக்களுக்கும் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Patti ,Bodhi Hill ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...