உத்தமபாளையத்தில் உணவு பாதுகாப்பு தின விழா

உத்தமபாளையம், ஜூன் 12: உத்தமபாளையத்தில் உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. உத்தமபாளையம் முகமது பாத்திமா மகளிர் உயர்நிலைப்பள்ளியில் உணவு பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.  உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் வரவேற்றார். உணவு பாதுகாப்பு பற்றி தலைமை ஆசிரியர் ஆபித் விளக்கினார்.

இதில் பாதுகாப்பான உணவு வகைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள் போன்றவற்றில் விற்கப்படும் உணவுகளை எப்படி சரிபார்த்து வாங்குதல் உள்ளிட்ட விபரங்களை மாணவிகளிடம் உணவு பாதுகாப்பு  அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதேபோல் கலப்பட பொருட்களை கண்டுபிடிப்பது பற்றி மாணவிகளிடம் விளக்கி உறுதிமொழி எடுக்கப்பட்டது.

× RELATED உத்தமபாளையத்தில் பிளாஸ்டிக்கிற்கு...