அல்லம்பட்டியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

விருதுநகர், ஜூன் 12: விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் உள்ள அல்லம்பட்டி காமராஜ் பைபாஸ் பகுதியில், கழிவுநீர் வாறுகால்களில் விதிகளை மீறி கட்டடங்கள் மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமித்திருந்தனர். இதனால், கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கழிவுநீர் சாலைகளில் சென்று பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. இது குறித்து தனி அலுவலர் சீனிவாசனிடம் ஒருவர் புகார் தெரிவித்தார். இதன்பேரில், ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள் கழிவுநீர் செல்வதற்கு ஏற்ப, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Tags : Removal ,
× RELATED 32 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி...