குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பூர், ஜூன் 12: திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி பெற வரும் 14ம் தேதி விண்ணப்பிக்கலாம். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வழியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி -1, தொகுதி -2, தொகுதி -4, கிராம நிர்வாக உதவியாளர், ஐ.பி.பீ.எஸ். தேர்வுகள், ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கென இலவச பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. மேலும், இவ்வட்டங்களில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கு தேவையான பொது அறிவு புத்தகங்கள் மற்றும் பாடபுத்தகங்கள் உள்ளன.  தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக குரூப்-4 தேர்வின் மூலமாக 5ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்விற்கு வரும் 14ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு செப்.1ம் தேதியன்று நடக்க உள்ளது. தற்போது மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தில் ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு, வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால்
அறிவிக்கப்பட இருக்கும் தேர்வு ஆகியவைகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடந்த வருகிறது. இதில் குரூப்-4 தேர்வு எழுத விரும்பும் மனுதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED இலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்