×

18 வயதுக்கு குறைந்தவர்கள் ஓட்டினால் வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும் அருப்புக்கோட்டையில் போலீசார் எச்சரிக்கை

அருப்புக்கோட்டை, ஜூன் 12:  பதினெட்டு வயதுக்கு குறைந்தவர்கள் வாகனம் ஓட்டினால், வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும் என, அருப்புக்கோட்டையில் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர். அருப்புக்கோட்டை போக்குவரத்து காவல்நிலையத்தில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை வகித்தார். எஸ்ஐக்கள் மாரிமுத்து, செல்லத்துரை கலந்து கொண்டனர். கூட்டத்தில், ‘கனரக வாகனங்கள் மூலம் வரும் சரக்குகளை பஜாரில்  காலை 8 மணிக்கு மேல் இறக்கக்கூடாது.  சிறிய வேன்களில் கொண்டு வரும் சரக்குகளை மதியம் 1 மணி முதல் 4 மணி வரை இறக்கலாம்.  மீறினால், அபராதம் விதிக்கப்படும். 18 வயதிற்கு குறைந்தவர்கள் வாகனங்கள் ஓட்டினால், வாகனங்களை பறிமுதல் செய்து, வாகன பெர்மிட் ரத்து செய்யப்படும்.  பஜார் கடைக்காரர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக, தங்களது வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்தக்கூடாது.  

பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அண்ணா சிலை பகுதி முன்பு ஆக்கிரமித்துள்ள கடைக்காரர்கள் தாங்களாக முன்வந்து அகற்றாவிட்டால் பொருட்கள் பறிமுதல் செய்து, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதிக லோடு ஏற்றி அதிவேகமாக வரக்கூடாது.  ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ், ஆர்சி ஆகியவை நகல் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.  ஒரு வழிப்பாதையை கடைப்பிடிக்க வேண்டும்.  விதிகளுக்கு புறம்பாக வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்தக்கூடாது.  கனரக வாகன ஓட்டுநர்கள் விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும், கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது.

Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...