×

தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல், ஜூன் 12:திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கான தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. தீத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் தீயணைப்பு துறை சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்படும்போது மாணவிகள் எவ்வாறு செயல்படவேண்டும் என்ற விளக்கம் மற்றும் ஒத்திகை நடைபெற்றது. இதில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டரில் தீ பிடித்தால் எப்படி அதை அணைக்க வேண்டும் என்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டு மாணவியர் ஒருவரை அழைத்து தீயை அணைக்க வைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அருகில் உள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், ஆயில் மற்றும் பெட்ரோல் நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் எவ்வாறு நாம் இருக்க வேண்டும் என்றும், மேலும் உடம்பில் தீ பிடித்தால் உடனே கீழே படுத்து உருளவேண்டும். மேலும் முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார், மாவட்ட தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார், உதவி அலுவலர் சங்கர், நிலைய அலுவலர் சக்திவேல், பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : school children ,fire department ,
× RELATED நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்