வத்தலக்குண்டுவில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

வத்தலக்குண்டு, ஜூன் 12:வத்தலக்குண்டுவில் நடந்த மாநில அளவிலான ஆணழகன் போட்டியை திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் தமிழ்நாடு ஆணழகன் சங்கம் மற்றும் தனலெட்சுமி நினைவு விளையாட்டு கழகம் சார்பில் ஆணழகன் போட்டி நடந்தது.இதன் துவக்க விழாவுக்கு தென்னிந்திய ஆணழகன் சங்க செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு உடற்பயிற்சி கழக முன்னோடிகள் கலைச்செல்வன், முத்துமாரிசன், சின்னா என்ற ராஜதுரை முன்னிலை வகித்தனர். திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 120 வீரர்கள் கலந்து கொண்டனர். விமானப்படையைச் சோ்ந்த அக்ஷய் சேப்ரா நடுவராக இருந்தார். போட்டியில் மதுரையை சேர்நத விஜய்ஹரிஷ் அதிக புள்ளிகள் குவித்து முதலிடம் பெற்று மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியை நூற்றுக்கும் மேற்பட்ேடார் கண்டு களித்தனர்.

Tags : match ,house ,Lord ,
× RELATED கடைசி T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள்...