பண்ணுவார்பட்டியில் கிராம சபை கூட்டம்

நத்தம், ஜூன் 12: நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வள அலுவலர் ரகுபதி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கருப்பையா வரவேற்றார். கூட்டத்தில் பண்ணுவார்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பணியாளர்கள் செயல்பாடுகள் பற்றியும் சமூக தணிக்கை குறித்தும் விளக்கப்பட்டது. இதில் கிராம சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Gram Sabha ,Pravurpatti ,
× RELATED மாவட்டம் முழுவதும் சம்பிரதாயத்திற்கு நடக்கும் கிராம சபை கூட்டங்கள்