×

புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

குஜிலியம்பாறை, ஜூன் 12:தமிழகத்தில் 1 முதல் பிளஸ்2 வரையில் உள்ள பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த கல்வியாண்டில் முதற்கட்டமாக 2018-19ம் ஆண்டில் 1,6,9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 2019-2020ம் கல்வியாண்டில் 2,3,4,7,8 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சிபிஎஸ்இ பள்ளி பாடத்திற்கு இணையாகவும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ளவும், புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 12ம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயிற்சி வழங்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள வகுப்புகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது பிளஸ்2 வகுப்பு பாடம் எடுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாடவாரியாக பயிற்சி வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முதற்கட்ட பயிற்சி தொடங்கியது. மூன்று வாரங்கள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், கணக்குபதிவியல், வணிகவியல், கணிணி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு பின் கைவிடப்பட்டது

Tags : teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...