×

குன்னூரில் மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு விழிப்புணர்வு

குன்னூர், ஜூன் 12: தென்மேற்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் இயற்கை பேரிடர் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில்  பல்வேறு முன்னெச்செரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் குன்னுார் அருகே உள்ள தனியார் பள்ளியில்  குன்னூர் தீயணைப்புத்துறையினர் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவது, தீக்காயங்கள் ஏற்பட்டவர்களை எவ்வாறு மீட்பது, அடுக்கு மாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு சிக்கியுள்ளவர்களை கயிறு முலம் மீட்பது மற்றும்  பேரிடர் காலங்களில் மரம் விழுந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டு வாகனங்களுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை ஹைட்ராலிக்ஜாக்கி கொண்டு மீட்பது உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவ மாணவியர் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஊட்டி :  பருவமழைகளின் போது ஏற்படும் பேரிடர்களில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழை பாதிப்புகளில் இருந்து காத்து கொள்வது தொடர்பாக ஊட்டி தீயணைப்பு நிலையம் சார்பில் ஊட்டி ஜோசப் பள்ளியில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பருவமழையின் போது நிலச்சரிவு, மரம் விழுதல் போன்ற இடர்பாடுகளின் போது எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். பேரிடர்கள் ஏற்படும் போது தற்காத்து கொள்ளுதல், மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து செயல்முறைவிளக்கமளிக்கப்பட்டது. மேலும் மாடி வீடுகளில் தீ ஏற்பட்டால் எவ்வாறு மீட்பது, கேஸ் கசிவு போன்றவற்றில் இருந்து சரி செய்து கொள்வது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இதில் மாணவர்களும் ஒத்திகை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்ரமணி, பள்ளி தலைமையாசியர் பெலவேந்திரன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kunar ,
× RELATED குன்னூர் ஐயப்பன் கோயில் 41 நாள் மண்டல பூஜை நிறைவு விழா