×

இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி கோவை விவசாயிகள் பெங்களூர் பயணம்

கோவை, ஜூன் 12: மத்திய அரசின் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முகமை (ஆட்மா) திட்டத்தின் கீழ் பிறமாநிலங்களில் கடைபிடிக்கப்படும் விவசாய முறைகள் மற்றும் திட்டங்களை தெரிந்துகொள்ள விவசாயிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் சூலூர், பொள்ளாச்சி பகுதிகளை சேர்ந்த 20 விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு நேற்று ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். பெங்களூரூர் செல்லும் அவர்களுக்கு கனகபுராவில் உள்ள  வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுரியில், இயற்கை விவசாயம் குறித்த வகுப்புகளும், இயற்கை உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகள் தயாரிப்பு குறித்த பயிற்சிகளும், 4 நாட்கள் நடக்கிறது. இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், ‘‘வருங்காலங்களில் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கும் பயிர்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. மக்களுக்கு வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத நல்ல உணவுப்பொருட்களை தரவேண்டும். பயிற்சி முடிந்து வந்ததும் இயற்கை விவசாயத்தில் முழு வீச்சில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Tags : Coimbatore ,Bangalore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு