மேம்பால தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்து

கோவை, ஜூன் 12:    கோவை உக்கடம் மேம்பாலம் பணி நடந்து வருவதால் உக்கடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், உக்கடம், செல்வபுரம் சாலை, உக்கடம்-சுங்கம் பைபாஸ் சாலை பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. நேற்று மாலை உக்கடம்-சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீரென வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், சாலை முழுவதும் ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தது. அப்போது, சுங்கத்தில் இருந்து உக்கடம் நோக்கி செப்டிக் டேங்க் லாரி வந்து கொண்டு இருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மேம்பாலத்தின் மீது நின்றிருந்த கார் மீது மோதியது. மேலும், அருகில் வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
பின்னர், பாலத்தின் தடுப்பு சுவரின் மீது மோதி லாரி நின்றது. இந்த விபத்தில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. டூவிலரில் வந்த நபர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரி மற்றும் கார் ஆகிய வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Larry ,accident ,
× RELATED பாதாள சாக்கடை உடைப்பை சரி செய்தபின்...