×

சூலூரில் ஒரே நாளில் பில்லூர் குடிநீர் குழாயில் ஐந்து இடங்களில் உடைப்பு

சூலூர், ஜூன் 12:  சூலூர் பைபாஸ் சாலை முதல் முதல் ரங்கநாதபுரம் வரை செல்லும் பில்லூர் குடிநீர் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது. இதில் கண்ணம்பாளையம் ராமையா நகர் பகுதியில் அடிக்கடி குழாய் உடைபடுவதும் சரிசெய்வதுமாக உள்ளது. இதனால் குடிநீர் வெளியேறி அப்பகுதியில் தண்ணீர்  குளம் போல் தேங்கியுள்ளது. இந்நிலையில் குழாயில் செல்லும் தண்ணீரின் அளவை குறைத்து அழுத்தத்தை  குறைப்பதற்காக சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் 2  அடி விட்டம் உள்ள குழாயை, 10 அடி நீளத்திற்கு அகற்றிவிட்டு அந்த இடத்தில் 8  இன்ச் அளவுள்ள குழாய் பதித்து, தண்ணீரின் அழுத்தத்தை குறைக்கும் பணியில்   நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இவ்வாறு திடீரென குழாயின் அளவை சரிபாதிக்கு மேல் குறைப்பதால் அழுத்தம் தாங்காமல், குறிப்பிட்ட பகுதியின் தொடர்ச்சியாக  பதிக்கப்பட்டுள்ள உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்படும் என்று அப்போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் நேற்று  ஒரே சமயத்தில்  ஒரு கிலோ மீட்டருக்குள் 5 இடங்களில்  குழாய்  உடைப்பு ஏற்பட்டது. இதனால் பிரதான குழாயில் இருந்து வரும் தண்ணீர் சாலை எங்கும் ஓடி சாக்கடையில் கலந்து வீணாகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சி போக்கால் ஒரே நாளில் 5 இடங்களில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ரங்கநாதபுரம் கண்ணம்பாளையம் பாரதிபுரம் பள்ளபாளையம் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதான குழாயை நல்லமுறையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : places ,Sulur ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...