×

நொய்யல் ஆற்றை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 12:     கோவை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் இருந்து வரும் நொய்யல் ஆறு, பேரூர்,  வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 171 கி.மீ., பயணித்து காவிரியில் கலக்கிறது. இந்நிலையில், நொய்யல் ஆறானது மிகவும் மாசடைந்து வருகிறது. திருப்பூரை கடக்கும் போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகளின் கழிவு நீர்களும் நொய்யலில் கலக்கிறது. சுத்திகரிக்கப்படாத சாய கழிவுகள் நொய்யல் ஆற்றில் இரவு நேரங்களில் திறந்து விடப்படுகிறது. மேலும் கட்டிடக்கழிவுகள், மீன் கழிவுகள் ஆகியவற்றையும் கொட்டி செல்கின்றனர். இதனால் நொய்யல் ஆற்றில் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி, துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்நிலையில் இந்த பிளாஸ்டி கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றி நொய்யல் ஆற்றை தூர்வார வேண்டும். நொய்யல் நதியை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nouriel River ,Divorce Community Activists ,
× RELATED நொய்யல் ஆற்றை தூர்வார சமூக ஆர்வலர்கள் கோரிக்கை