×

ஆஸ்திரேலியாவில் பின்னலாடை கண்காட்சி நிறுவனங்களுக்கு ஏஇபிசி., அழைப்பு

திருப்பூர், ஜூன் 12:ஆஸ்திரேலியாவில் நடக்கும் சர்வதேச பின்னலாடை கண்காட்சிகளில் பங்கேற்க இந்திய பின்னலாடை நிறுவனங்களுக்கு இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு மற்றும் ஏஇபிசி., அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் ஏஇபிசி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் வரும் நவம்பர் மாதம் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடக்கிறது. இதில், உலகின் பல்வேறு நாடுகளை ேசார்ந்த பையர்கள், பின்னலாடை உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஸ்டால்கள் அமைத்து குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்த கூடிய பல்வேறு டிசைன்கள் கொண்ட ஆடைகளை கண்காட்சியில் காட்சிப்படுத்துகின்றனர்.
 
இந்த கண்காட்சியின் மூலம் பல்வேறு நாடுகளை ேசார்ந்த பையர்கள் மூலம் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தங்கள் நிறுவனத்தின் மூலம் ஸ்டால் அமைக்க ஜூன் 30ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.  இதற்காக ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் தள்ளுபடி செய்து ரூ.ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரொக்க பணத்தை மட்டும் பெற்றுக்கொள்ளலாம். கண்காட்சியில் இடம் பெறும் நிறுவனங்களுக்கு ஸ்டால் அமைக்க 9 சதுர மீட்டர் இடம் ஒதுக்கீடு செய்து, 3 ஸ்பாட் லைட், 100 பிளாஸ்டிக் ஹேங்கர், ஒரு டேபிள், 2 சேர், ஒரு எக்ஸ்போ போர்டு, வேஸ்ட் பேப்பர் பின், இன்சூரன்ஸ், மினரல் வாட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரப்படும். கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மேலும் விபரங்களுக்கு ஏஇபிசி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Tags : AESC ,exhibition companies ,Australia ,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...