×

சங்கமேஸ்வரர் கோயில் வளாகத்தில் மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

பவானி, ஜூன் 12: பவானி சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 90 மின் விளக்குகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இக்கோயிலில் சுற்றுலா பயணிகள் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் சங்கமேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 90 இடங்களில் மின்விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. கோயில் நுழைவாயில் துவங்கி வாகனம் நிறுத்துமிடம், காவிரி மற்றும் பவானி ஆறுகள் சந்திக்கும் கூடுதுறை உள்பட பல்வேறு பகுதிகளில் மின் விளக்கு அமைக்கப்பட உள்ளன.  ஏற்கனவே, இக்கோயிலில் பல்வேறு இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் உள்ளன. தற்போது 90 இடங்களிலும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, வருகிறது.

Tags : workshop ,temple premises ,Sangameswara ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...