தன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், ஜூன் 12:நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது.  தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க, விற்க விவசாயிகள் மட்டும் வியாபாரிகள் சந்தைக்கு  வருகின்றனர். நேற்று கூடிய சந்தைக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து மாடுகள்  வரத்து சரிந்தது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான மாடுகளே விற்பனைக்கு வந்தது. இதனால், சந்தையில் மாடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹21 ஆயிரத்திற்கு  விற்கப்பட்ட இறைச்சி மாடு, இந்த வாரம் ₹23 ஆயிரத்திற்கும், ₹41 ஆயிரத்திற்கு  விற்கப்பட்ட கறவை மாடு ₹42 ஆயிரத்திற்கும், ₹8 ஆயிரத்திற்கு  விற்கப்பட்ட கன்றுக்குட்டிகள் ₹10 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

× RELATED மாடுகள் விலை உயர்வு