×

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் சின்ராஜ் எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

சேந்தமங்கலம், ஜூன் 12: நாடாளுமன்ற  தேர்தலில் நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சின்ராஜ் வெற்றி பெற்றார்.  இதையடுத்து, தொகுதி முழுவதும் சென்று எம்பி சின்ராஜ் வாக்காளர்களுக்கு நன்றி  தெரிவித்து வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று சேந்தமங்கலம் ஒன்றியத்தில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு எம்பி சின்ராஜ் நன்றி தெரிவித்தார்.   அவருடன் சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் மற்றும் கூட்டணி  கட்சியினர் உடனிருந்தனர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்கள்  வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். பொதுமக்கள் கட்சி பாகுபாடின்றி தங்கள்  பகுதிகளில் உள்ள குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். அதனை உடனடியாக நிறைவேற்ற  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர  செயலாளர் தனபாலன், பேரூர் செயலாளர் நடேசன், மாவட்ட பிரதிநிதி முருகேசன்  மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MP voters ,Cinaraj ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் காஞ்சி எம்பி வாக்காளர்களுக்கு நன்றி