×

ராசிபுரத்தில் மரக்கன்று நடும் விழா

ராசிபுரம், ஜூன்12: உலக  சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் கிழக்கு வலசு  கிராமத்தில் பசுமை மேகங்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா  நடந்தது. கிழக்குவலசு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும்  மேற்பட்டோர் இணைந்து பசுமை மேகங்கள் என்ற அறக்கட்டளையை தொடங்கி, கடந்த  ஓராண்டாக கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்குதல், ஏரி,  குளம் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி சுத்தப்படுத்துதல், ஏரிகளில் உள்ள  சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்ற பணிகளை இவர்கள் செய்து வருகின்றனர். உலக  வெப்பமயமாதலை தடுப்பதற்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இதுபோன்ற  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல்  தினத்தையொட்டி, கிழக்கு வலசு கிராமத்தில் கூடிய இளைஞர்கள் புங்கை,  சரக்கொண்றை, அரசம், புளியம், வேம்பு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.

Tags : Planting ceremony ,Rasipuram ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...