உழவர் சந்தை அருகில் வாலிபர் சடலம் மீட்பு

திருச்செங்கோடு, ஜூன் 12: திருச்செங்கோடு உழவர் சந்தை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே உழவர் சந்தை அமைந்துள்ளது. நாள்தோறும் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்க, வாங்க ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று உழவர் சந்தை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருச்செங்கோடு நகர போலீசார், வாலிபரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு இறந்தார் என்ற விபரம் தெரியவில்லை. அங்குள்ள கடைகளில் போலீசார் விசாரித்ததில், இறந்து கிடந்த வாலிபர், ஓட்டல் கடைகளில் தினக்கூலிக்கு வேலை செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

× RELATED சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது