×

போச்சம்பள்ளி பகுதியில் சரக்கு வாகனத்தில் ஆபத்து பயணம்

போச்சம்பள்ளி, ஜூன் 12: போச்சம்பள்ளி பகுதியில் சரக்கு வாகனத்தில் மக்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள், மாம்பழ மண்டிகள், கல் குவாரிகள் என பல உள்ளன. இதனால், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பணிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ்களை தவிர்த்து சிலர் மாம்பழ லோடு ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், மணல் மற்றும் செங்கல், கரும்பு உள்ளிட்ட வாகனங்களின் மேல் அமர்ந்தபடி பயணிக்கின்றனர்.

மேடு பள்ளம் நிறைந்த சாலையில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும், சிலர் கோயில் விழா, திருமண விழாவிற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்ைல என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சரக்கு வாகனத்தில் பயணிப்போரை எச்சரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் ஒத்துழைக்க அழைப்பு
சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்செல்லும் விபரீத முயற்சியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.  விழா மற்றும் சுப நிகழ்ச்சிக்கு சரக்கு வாகனங்களை தவிர்த்து, அதற்காக உள்ள வாகனங்களில் பயணித்தால் போலீசாருக்கு உதவியாக இருக்கும். அதேபோல், விபத்து அபாயத்தில் இருந்து விடுபடலாம். எனவே, விபத்தை தவிர்க்க சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது அனைவரின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

Tags : area ,Pochampalli ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...