×

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தையல் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜூன் 12:  கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் குடும்பத்தினருக்கு இலவச தையல் பயிற்சி வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், மற்றும் தற்போது படையில் பணியாற்றி வரும் படைவீரர்களின் மனைவி, திருமணம் ஆகாத மகள் மற்றும் விதவையர்களுக்காக இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் நடந்து வரும் 6 மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அடுத்த பயிற்சி வகுப்பு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பயிற்சியில் சேரும் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ₹50 வீதம் ₹1,000ம் கச்சாப்பொருட்கள் மாதம் ஒன்றுக்கு ₹1,000ம் பயிற்சியின் முடிவில் இலவசமாக தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருகிற 29ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரரை சார்ந்தோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு உதவி இயக்குநர் பிரேமா தெரிவித்துள்ளார்.

Tags : soldiers ,Krishnagiri district ,
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்