×

காவேரிப்பட்டணம் பகுதியில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச்செல்லும் அவலம்

காவேரிபட்டணம், ஜூன் 12: காவேரிப்பட்டணம் பகுதிகளில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ்களில், அதிகளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நடு ரோட்டிலேயே நிறுத்தி ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பர்கூர், காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல தனியார் கல்லூரி, பள்ளி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

ஒரு சில பஸ்களில் மாணவ, மாணவிகளை அதிகளவில் ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். ஒரு பஸ்சில் 50 மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லவேண்டிய இடத்தில், சுமார் 80 குழந்தைகளை அழைத்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதில் ஒரு இருக்கையில், 5 அல்லது 6 பேர் அமர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களைை நடுரோட்டிலேயே நிறுத்தி மாணவ, மாணவிகளை ஏற்றி இறக்குவது வாடிக்கையாக உள்ளது.

இதனால், பின்னால் வரும் வாகனங்கள் இந்த பஸ்கள் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போடுவதால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. எனவே, பஸ்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டும். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல வேண்டும். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,school ,Kaveripattinam ,
× RELATED உக்ரைனின் கார்கிவ் நகரில் அமைந்த முதல் ‘பங்கர் பள்ளி