×

சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழா

கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி சங்கல்தோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா நாளை (13ம் தேதி) தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சங்கதோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவி நாளை (13ம் தேதி) மாலை 7 மணிக்கு அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு 10 மணிக்கு தமிழ் இஸ்லாமிய பாடகர் இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் பாட்டுக்கச்சேரி நடைபெறுகிறது. 14ம் தேதி இரவு 7 மணிக்கு தர்கா கமிட்டி தலைவர் சையத் நசீர்அகமத் தலைமையில், அனைத்து ஜமாத்தார் முன்னிலையில் மலர் அலங்காரத்துடன் சந்தனகுட ஊர்வலம் கோட்டை மக்கானிலிருந்து துவங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சங்கல்தோப்பு தர்காவை சென்றடைகிறது. அன்று இரவு 10 மணிக்கு கர்நாடகா புகர் முகமத்அலிதப்ரேஸ் பார்ட்டிக்கும், உத்தரபிரதேசம் புகழ் அப்பாஸ் சாபிரி பரேல்வி பார்ட்டிக்கும் போட்டி உருது கவ்வாலி நடைபெறுகிறது.
இந்த உரூஸ்திருவிழாவையொட்டி இரண்டு நாட்களும் மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடைபெறும். 15ம் தேதி அதிகாலை 5 மணியளவில் பாத்திஹா ஓதி தப்ரூக் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று தர்கா நிர்வாக கமிட்டி, நகர ஜமாத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Festival ,
× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...