×

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 4.30 லட்சம்

நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலம் 4 லட்சத்து 30 ஆயிரத்து 827 பேர் பயன்பெற்றுள்ளனர். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட நிர்வாக அதிகாரி ராமன் கூறியதாவது: அவசர கால ஆம்புலன்ஸ் சேவை 108 திட்டம் கடந்த 2008ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 25 இயங்கி வருகிறது. இதில் 2009 முதல் 2019 வரை தாய்மார்கள் பிரசவம் பார்க்க 75 ஆயிரத்து 256 பேரும், சாலை விபத்து மற்றும் பிற விபத்துகளில் சிக்கிய 90 ஆயிரத்து 889 பேரும் என மொத்தம் இதுவரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 572 பேர் பயனடைந்துள்ளனர். இதே போல் தர்மபுரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 23 இயங்கி வருகிறது. இதில் தாய்மார்கள் பிரசவம் பார்க்க 63 ஆயிரத்து 787 பேரும், சாலை விபத்து, மற்ற விபத்துகளில் சிக்கிய 68 ஆயிரத்து 842 பேர் என மொத்தம் இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரத்து 254 பேர் பயனடைந்துள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மொத்தமாக இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 827 பேர் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Krishnagiri ,Dharmapuri district ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்