அரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் சூறை

தர்மபுரி, ஜூன் 12: அரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரூர் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனசு. இவர், வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(48). நேற்று முன்தினம் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சித்ரா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர், அன்றிரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அரூர் போலீசில் சித்ரா புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பொருட்களை அடித்து நொறுக்கினரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : house ,Aroor ,
× RELATED வீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது