கணவரின் 2வது திருமணத்திற்கு எதிர்ப்பு மருமகளை தாக்கிய மாமனார் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 12:  காவேரிபட்டணம் அருகே பெரியவேடனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கோவிந்தன்(32), கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த 7 ஆண்டுக்கு முன்பு சீதா(28) என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கோவிந்தனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சீதா கணவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், கணவரை விட்டு பிரிந்து சீதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கோவிந்தனுக்கு 2வது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. இதனையறிந்த சீதா, கணவர் வீட்டுக்கு சென்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது, கோவிந்தன் மற்றும் ராஜா ஆகியோர் சேர்ந்து சீதாவை கல்லால் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவை கைது செய்தனர். கோவிந்தனை தேடி வருகின்றனர்.

Tags : Manmohan ,daughter-in-law ,
× RELATED முருங்கை மரம் உரசி மின்வயர் அறுந்த...