×

திருச்சி மாவட்டத்தில் ஜமாபந்தி துவங்கியது

திருச்சி, ஜூன் 12: திருச்சி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் 1428ம் பசலிக்கான (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் நேற்று துவங்கியது. தொட்டியம் தாலுகாவில் முதல் நாளான நேற்று கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 501 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 65 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஜமாபந்தியில் கலெக்டர் சிவராசு பேசியதாவது:  மக்களிடம் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள நிலம் சம்மந்தமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முதல் நாள் நிகழ்ச்சி ஏலூர்பட்டி பகுதிக்கும், 2ம் நாள் நிகழ்ச்சி காட்டுப்புத்தூர் பகுதிக்கும், 3ம் நாள் நிகழ்ச்சி தொட்டியம் பகுதிக்கும் நடைபெறும். ஏலூர்பட்டி பகுதிக்கு, வாள்வேல்புத்தூர், எம்.களத்தூர், நாகையநல்லூர், நத்தம், ஏலூர்பட்டி, காமலாபுரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (நேற்று) நடைபெற்றது.

மொத்தம் 501 மனுக்கள் வரப்பெற்றது. இதில் 65 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 422 மனுக்கள் விசாரணையில் உள்ளது. நாளை (இன்று) காட்டுப்புத்தூர் பகுதிக்குட்பட்ட முருங்கை, கிடாரம், பிடாரமங்கலம், உன்னியூர், பெரியபள்ளிபாளையம், சின்னபள்ளிபாளையம், ராமசமுத்திரம், காட்டுப்புத்தூர் (மேற்கு) (கிழக்கு), சீலைப்பிள்ளையார்புத்தூர், காடுவெட்டி ஆகிய கிராமங்களுக்கும், 13 தொட்டியம் பகுதிக்குட்பட்ட அரசலூர் (21 திருநாராயணபுரம் உட்பட), தொட்டியம், அரங்கூர், அப்பணநல்லூர், கொளக்குடி, சித்தூர், சீனிவாசநல்லூர், அலகரை, மணமேடு, முள்ளிப்பாடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெறவுள்ளது’ என்றார். இதேபோல 11 தாலுகாக்களிலும் ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில் தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வம், தனி தாசில்தார் (முத்திரை கட்டணம்) ரவி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : district ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...