×

கூத்தாநல்லூரில் ஜமாபந்தி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

மன்னார்குடி, ஜூன்12: கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் ஜமாபந்தி நேற்று நடைபெற்றது. இதில் 9 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி வசம் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் கமலாபுரம், வடபாதி மங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய 3 உள்வட்டங்கள் உள்ளன. இந்நிலையில் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1428 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நிகழ்ச்சி கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

முதல் நாளான நேற்று கூத்தாநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வக்ராநல்லூர், ஆய்குடி, சேகரை, அதங்குடி, வெள்ளக்குடி, சித்தாம்பூர், ராமநாதன்கோவில், கூத்தாநல்லூர், லட்சுமாங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 189 பொது மக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா மற்றும் ஊராட்சி சார்பில் அனைத்து விதமான கோரிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி வசம் மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியில் மன்னார்குடி தாசில்தார் மலர்கொடி, தலைமையிடத்து துணை தாசில்தார் சிவதாஸ், உள்ளிட்ட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று மக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்து உரிய தீர்வினை வழங்கினர். ஜமாபந்தி நிகழ்ச்சி சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகள் நீங்கலாக தொடர்ந்து வரும் 26ம் தேதி வரை கூத்தாநல்லூர் தாசில்தாா் அலுவலகத்தில் நடைபெறுமென வருவாய் துறை அதிகாரிகள் கூறினர்.

Tags : Jamapandi village ,Koothanallur ,
× RELATED கோரையாற்றங்கரையில் பனை விதைகள் நடும் விழா