×

மன்னார்குடி அருகே கூரை வீடு, மாட்டு கொட்டகையில் தீ


மன்னார்குடி, ஜூன் 12; மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தில் கூரை வீடு மற்றும் மாட்டு கொட்டகையில் திடீரென தீப்பிடித்ததில் சுமார் 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாறன் (40), விவசாய கூலித் தொழிலாளி. இவர் கள் குடிசை வீட்டில் வசிக்கின்றனர். மேலும் வீட்டின் அருகில் கூரையிலான மாட்டு கொட்டகையில் சொந்தமாக 3 பசு மாடுகளை வளர்த்து பால் வியா பாரமும் செய்து வருகின்றனர். மாறன் நேற்று வழக்கம் போல் விவசாய வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மாறனின் கூரை வீடும், அதன் அருகில் இருந்த மாட்டு கொட்டகையும் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. மாட்டு கொட்டகைக்கு தீ பரவி யதால் அதில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகள் மீதும் தீக்காயங்கள் ஏற்பட்டதில் மாடுகள் அலறின.

அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து மன்னார்குடியில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின. 5 பவுன் தங்க நகையும், ரொக்கம் 10 ஆயிரமும், பீரோ, கட்டில், உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து விட்டதாக வும் அவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் இருக்கும் என்றும் மேலும் வீட்டில் வைத்திருந்த நிலப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து விட்டதாக மாறன் கூறினார். தகவலறிந்து டிஎஸ்பி கார்த்திக், தாசில்தார் லட்சுமி பிரபா, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். தீவிபத்து குறித்து தகவலறிந்து மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளி–்ட்டோர் ராமாபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று மாறனுக்கு ஆறுதல் கூறினர்.
ரூ 2.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம் விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்

Tags : Roof House ,Mannargudi ,
× RELATED ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...