கட்டுமான தொழிலுக்கு ஏற்பட்டுள்ளநெருக்கடியை தீர்க்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கரூர் ஏஐடியுசி சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 12: கட்டுமான தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்க கரூர் மாவட்ட குழுக்கூட்டம் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்து. மாவட்ட செயலாளர் வடிவேலன் பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கட்டுமான தொழிலுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சப்பட்டி ஏரி பகுதியில் மிகவும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசைக்கேட்டுக்கொள்வது.
வறண்டு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு நிரந்தரமாக காவிரி நதியில் இருந்து நீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையில்லா கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலையில்லா காலத்திற்கு ரூ.5 ஆயிரம் அரசு நிதி வழங்க வேண்டும். உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

× RELATED பீகாரில் மூளைக்காய்ச்சலால் 130...