ஊதியக்குழு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் கரூர் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 12: ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கரூர் கிளை மாதாந்திர கூட்டம் கரூர் மாவட்ட அலுவலகத்தில் கிளை தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பசுபதி அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் விசுவநாதன், ராசலிஙகம், சுந்தரராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் வழங்க உத்தரவிட்டதற்கு அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வூதியர்களுக்கு 21 மாத ஊதியக்குழுவின் நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசை போல் தர ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags : meeting ,Karur Retired Officers Association ,
× RELATED பணப்பலன்களை விரைந்து வழங்ககோரி ஓய்வு...