×

கரூர் எம்ஜி ரோட்டில் பாதாள சாக்கடை பணியை பாதியில் நிறுத்தியதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜூன் 12: கரூர் எம்ஜி நகர் சாலையின் துவக்க பகுதியில் சீரமைக்கப்படாத நிலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட சேலம் பைபாஸ் சாலையின் சர்வீஸ் சாலை பகுதியில் இருந்து செங்குந்தபுரம், திண்ணப்பா கார்னர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் எம்ஜி ரோடு உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் அதிகளவு உள்ளதால் அளவுக்கு அதிகமான வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் எம்ஜி ரோட்டின் துவக்க பகுதியில் பாதாள சாக்கடை பணி மேற்கொள்வதற்காக மூடி அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போதைய நிலையில், பணிகள் முழுமை பெறாமல் பாதாள சாக்கடையை சுற்றிலும் கற்கள் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. அதிகளவு வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில் இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்து செல்லும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இந்த பாதாள சாக்கடை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Vehicle drivers ,Karur MG Road ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்