×

தாந்தோணிமலை சவுரிமுடி தெருவில் மழை காலத்தில் சாலையில் சேறும், சகதியுமாக காணப்படும் அவலம்

கரூர், ஜூன் 12: மழை சமயங்களில் தொடர்ந்து சகதிமயமாக மாறி வரும் சவுரிமுடித் தெருவில் நிலவும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் சவுரிமுடித் தெரு உள்ளது. இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டது. அப்போது சீரான முறையில் வடிகால் அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக மழை எப்போது பெய்தாலும் சவுரி முடித்தெருவின் சந்திப்பு பகுதியில் ஒட்டுமொத்த சாக்கடையும் ஒன்று சேர்ந்து நின்று கொள்கிறது. இதனால் மழை ஒய்ந்து வெயில் அடிக்கும் வரை பொதுமக்கள் யாரும் நடந்து கூட செல்ல முடியாத நிலை இந்த பகுதியில் நிலவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்னை அதிகளவு உருவான போது, குழாய் மூலம் சாக்கடை கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது அதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தாலும், மழை அதிகளவு பெய்யும் சமயங்களில் இதுபோல சாக்கடை சூழ்ந்து கொள்ளும் சம்பவம் நடைபெறுகிறது. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்பும், சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதாகவும் இந்த பகுதியினர் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சாக்கடை கழிவு நீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Dantontemalai Choorimudi Street ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...