×

இருசக்கர வாகனங்களால் பயணிகள் அவதி கரூர் உழவர் சந்தையில் அதிகாரிகள் அலட்சியத்தால் தக்காளி தட்டுப்பாடு

கரூர், ஜூன் 12: கரூர் உழவர்சந்தையில் தக்காளி தட்டுப்பாடு போக்க அதிகாரிகள் அலட்சியத்தினால் பொதுமக்கள் ஏமாற்றம்அடைகின்றனர். கரூர் உழவர்சந்தைகள் விவசாயிகள் தக்காளி விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். தற்போது விளைச்சல் இல்லை, ஹைபிரிட் தக்காளி தர்மபுரி ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டில் இருந்தும், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ஒருகிலோ தக்காளி மொத்த விலையில் ரூ.40 எனவும் சில்லரை விற்பனையில் ரூ.60க்கும் விற்பனையாகிறது.

தக்காளி விலை உயர்ந்ததால் விலை நிர்ணயிப்பதில் உழவர்சந்தை அதிகாரி குளறுபடி செய்வதால் விவசாயிகள் கரூர் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக தக்காளி கொண்டு வருவதில்லை. வேளாண் விற்பனை உதவி இயக்குனர் நடவடிக்கையால் பொதுமக்கள் தக்காளி இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். காய்கறிகளை உழவர் சந்தையில் மலிவாக விலைக்கு வாங்கிவிட்டு தக்காளியை மட்டும்வெளியில் உள்ள கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். தக்காளிக்கு கட்டுப்படியான விலையை அதிகாரி நிர்ணயம்செய்தால் மட்டுமே தங்களுக்கு கட்டுப்படியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று மாதமாக இப்பிரச்சனை நடந்து கொண்டிருந்தும் பல முறை புகார்அளித்தும்எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். பொதுமக்களின் மனுக்களை வாங்கி வைத்துக்கொள்கின்றனரே தவிர எந்தநடவடிக்கையும் எடுப்பதிலலை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : passengers ,farmers market ,Karur ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...