ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சிகப்பு எள் கிலோ ரூ.108க்கு ஏலம்

க.பரமத்தி, ஜூன் 12: சிவப்பு எள் ஏலத்தில் ஒரு கிலோ ரூ.108க்கு ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் 193 மூட்டைகளில் 14336 எடைக்கு நடந்த ஏலத்தில் சிகப்பு எள் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.94, அதிக விலையாக கிலோ ரூ.108க்கு ஏலம் போனது.

× RELATED விருதுநகர் உழவர் சந்தை