×

புதுக்கோட்டையில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 51 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தீ விபத்தை தடுப்பது எப்படி, தீ விபத்து ஏற்பட்டால் தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சென்னை தீயணைப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளது. இதன்பேரில் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ விபத்து ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்மறை விளக்கம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி செழியன் தலைமை தாங்கினார். இதில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டால், அங்கு சிக்கி தவிப்பவர்களை எப்படி மீட்பது, எலக்ட்ரானிக்ஸ் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது, தீ விபத்து ஏற்படும்போது, தங்களை பாதுகாத்து கொண்டு மற்றவர்களை எப்படிது காப்பாற்றுவது, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கின்போது எப்படி செயல்பட வேண்டும். புயல் தாக்குதலின்போது வீட்டின் மீது சாய்ந்த மரங்களை எப்படி அகற்றுவது, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் மாணவ, மாணவிகளுக்கு
வழங்கினர்.

Tags : Fire prevention camp ,Pudukottai ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்