கலெக்டர் தகவல் பொன்னமராவதியில் அரசு கல்லூரி துவங்கப்படுமா?

பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதியில் அரசுக் கல்லூரியின் அமையும் என்ற இப்பகுதி மாணவர்களின் கனவு எப்போது நிறைவேறும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியினை மையமாகக் கொண்டு 42 கிராம ஊராட்சி, ஒரு பேரூராட்சி மற்றும் இதனையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளையும், திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் பொன்னமராவதியில் ஒரு அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்றத் தேர்தலின்போது பொன்னமராவதியில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகள் சொல்லி ஓட்டுக் கேட்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்ததும் வாக்குறுதி எதையும் நிறைவேற்றுவதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மேற்படிப்புக்கு அரசு கல்லூரிக்கு புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி போன்ற பகுதிகளுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலையுள்ளது என இப்பகுதி மாணவர்கள் கல்லூரி படிப்பை படிக்க ஏதுவாக பொன்னமராவதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collector ,Ponnaravaruwa ,
× RELATED விசாரணைக்கு அழைத்து விடுவிப்பு...