×

உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி கறம்பக்குடி அருகே ராஞ்சியன் விடுதியில் முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் திருட்டு பொன்னமராவதி அருகே இரு சமூகத்தினரிடையே மோதல்

பொன்னமராவதி, ஜூன் 12: பொன்னமராவதி அருகே இரு சமூகத்தினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக 10பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாபிதேகங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே செவலூரைச் சேர்ந்த மகேஷ்வரன் 12ம் வகுப்பு மாணவர். சோமஸ்வரன் 11ம் வகுப்பு மாணவர். காந்த் பாலிடெக்னிக் மாணவர். மூவரும் புதுக்கோட்டையில் இருந்து வந்த பேருந்தில் செவலூர் விளக்கில் இறங்கி அவரவர் ஊருக்கு நடந்து சென்றனர். இதில் காந்த் இருவரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக மகேஷ்வரன், சோமஸ்வரன் ஆகியோர் அவர்கள் வீட்டில் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் அருகில் உள்ளவர்களிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சென்றனர்.

அப்போது அங்கு கச்சேரிக் கூடத்தில் இருந்தவர்களுக்கும், விசாரிக்க சென்றோருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதில் காயமடைந்த சூர்யபிரகாஷ் (19), தனுஷ் (17) ஆகியோர் வலையபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் இது குறித்து தனுஷ் கொடுத்த புகாரின் பேரில் பொன்னமராவதி டிஎஸ்பி செந்தில்குமார் பரிந்துரையின் கீழ் பனையப்பட்டி போலீசார் தீபக் என்ற ராஜ்குமார், பாலு, கங்கா உட்பட 10பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க செவலூரில் மூன்று இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Muthuramaniyan ,Ponnaravarai ,Rannian ,hotel ,Karambakkudi ,
× RELATED பொன்னமராவதி அருகே ஏனமாரியம்மன் கோயிலில் பால்குட விழா