×

பெரம்பலூர் பாலக்கரையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி துவக்க விழாவிற்கு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முகமது யூசூப் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணி, பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது.

பேரணியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பெரம்பலுர் தொழிலாளர் துணை ஆய்வர் ஜெயராஜ், தொழிலாளர் உதவி ஆய்வர் சாந்தி, சைல்டுலைன், குழந்தை பாதுகாப்பு அழகு அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Awareness Campaign ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...