அர்த்தனேரி கிராமத்தில் உள்ள தைலமர தோப்பில் தீ விபத்து

தா.பழூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அர்த்தனேரி கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி (42), பொற்பதிந்தநல்லூரை சேர்ந்த ராமலிங்கம் (46) ஆகியோருக்கு சொந்தமான தைல மரத்தோப்பில் தீப்பிடித்து எரிந்தது. இந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு துறையினர் வேறொரு இடத்தில் (மணக்கரை கிராமத்தில்) தீயை அணைத்து கொண்டு இருந்தனர்.
இதனால் செந்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு துறையினர் வர தாமதமானதால் தா.பழூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீ பரவாமல் தடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

× RELATED பிரபல ஓட்டலில் தீ