×

குறுவை சாகுபடி செய்வதற்கு உரிய காலத்தில் விவசாய கடன் கிடைக்குமா?

அரியலுார், ஜூன் 12: குறுவை சாகுபடி செய்வதற்கு உரிய காலத்தில் விவசாய கடன் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவின்படி ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முன்னோடி விவசாயிகள், வங்கியாளர்கள், கூட்டுறவுத் துறை வேளாண்துறை, நபார்டு வங்கி அலுவலர்கள், சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகிகள் அடங்கிய மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவானது அடுத்த நிதியாண்டுக்கான பல்வேறு வகையான பயிர்களுக்கு கடன் கிடைக்கவும், பயிர்கடன் வசூல் பின்பற்ற வேண்டிய பருவகாலங்களை நிர்ணயித்து அதை மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவுக்கு பரிந்துரை செய்யும். அதை மாநில அளவிலான தொழில்நுட்ப குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டுக்கான பயிர்க் கடன் அந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் உறுதி செய்யப்படும். ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும். அதன்படி 2018-19ம் ஆண்டுக்கான பயிர் கடன் திட்டம், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் சுற்றறிக்கை கடந்தாண்டு ஏப்ரல் 12ம் தேதி வெளியிடப்பட்டது.

இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை விமலநாதன் கூறியதாவது:
இந்தாண்டு குறுவை சாகுபடி மின்மோட்டார் வசதியுள்ள இடத்தில் கடந்த மே இரண்டாவது வாரத்திலேயே துவங்கிவிட்டது. ஆனால் இதுவரை கூட்டு றவு வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்தோ, மத்திய கூட்டுறவு வங்கி தலைமை யிடமிருந்தோ இந்தாண்டுக்கான பயிர் கடன் திட்ட அனுமதி சுற்றறி க்கை உத்தரவு இதுவரை வரவில்லை. நிலத்தடி நீரை கொண்டு பல விவசாயிகள், குறுவை சாகுபடியை துவங்கி விட்டனர். ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் எந்த ஒரு விவசாயிக்கும் குறுவை பயிர்கடன் வழங்க முடியாத நிலையில் உள்ளன. மேலும் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளும் இதே நிலையில் தான் உள்ளது. எனவே தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு, பயிர்க்கடன் திட்டத்தை ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரத்திலேயே அறிவித்து கோடை சாகுபடி செய்யும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றார்.

உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி விவசாயிகள் சங்க கூட்டம்:
தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விவசாயம் செய்வதற்கு வசதியாக அரசு நுண்ணீர் பாசனத்திட்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவி கள் இடுபொருட்களையும் வழங்கி வருகிறது. நிலத்தடி நீரை கொண்டு பல விவசாயிகள், குறுவை சாகுபடியை துவங்கி விட்டனர். ஆனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் எந்த ஒரு விவசாயிக்கும் குறுவை பயிர் கடன் வழங்க முடியாத நிலையில் உள்ளன. பயிர்க்கடன் திட்டத்தை ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரத்தி லேயே தமிழக அரசு அறிவித்து கோடை சாகுபடி செய்யும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர் கடன் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், மழைநீர் சேகரிக்கும் இடங்கள் என இது தொடர்பான திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது