×

அரியலூர் மாவட்டத்தில் முந்திரி கொட்டை விலை வீழ்ச்சி

அரியலூர், ஜூன் 12: அரியலூர் மாவட்டம் முந்திரிக்கொட்டை விளைச்சல் குறைவாக இருந்தும் சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் செந்துறை, ெஜயங் கொண்டம்  பகுதியில்  அதிகளவில் முந்திரி சாகுபடி நடந்து வருகிறது.  விவசாயிகளின் ஆண்டு வருமானத்திற்கு முந்திரி ஒரு முக்கிய காரணமாகும். கோடை வெயிலால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருந்த முந்திரிமரங்கள் காய்ந்து வருகிறது. ஒரு சில மரங்களில் தற்போது காய்ப்பதற்கு துவங்கி உள்ளது. ஒரு சில முந்திரிமரங்கள் காய்த்து இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த முந்திரிக்கொட்டைகள் சென்ற ஆண்டு கிலோ ரூ.120 முதல் 150 வரை கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மிக குறைந்த அளவில் முந்திரி காய்த்திருந்தாலும் அதற்கு சரியான விலை இல்லை. தற்போது கிலோ ரூ. 80 மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே இந்த முந்திரி விவசாயத்தின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முந்திரி வியபாரி கூறியதாவது: அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் மரங்கள் ஓரளவு காய்த்தாலும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு முந்திரிகொட்டை வராததால் இந்த ஆண்டு விலை வீழ்ச்ச்சி ஏற்பட்டுள்ளது என்றார்.

விவசாயிகள் கவலை டெல்டா விவசாயிகள் கவலை வீசி வரும் சூறைக்காற்றால் பருவமழைக்கு பின்னடைவு?
டெல்டா மாவட்டத்தில் வீசி வரும் சூறைக்காற்றால் பருவ மழைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான நாகை, தஞ்சை, திருவாரூர், கரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங் களாக சூறைக் காற்று தொடங்கி வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவழை சீசன் துவங்கி உள்ள நிலையில் தற்போது வரை கண்ணா மூச்சி காட்டி வரும் நிலையில் தான் பருவமழை உள்ளது என டெல்டா பாசன விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தென்மேற்கு பருவழை சீசன் துவங்கிய அன்று முதல், சிறிது நேரம் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. காலையில் குளிர்ந்த காற்றும், மதியம் முதல் மாலை வரை அனல் காற்றும் வீசி வருகின்றது. மழை பெய்யாததால் விவசாயிகள் உழவு பணி செய்ய முடியாமல் காத்துக் கிடக்கின்றனர். டெல்டா மாவட்ட பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே சூறைக்காற்று வீச துவங்கி உள்ளது. காற்றில் மண் கலந்து வருவதால் வயதானவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சாலைகளில் செல்ல முடியாமல் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூறைக்காற்றால் நடந்த செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல் வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த வருடங்களாக போதிய மழையின்றி ஏரி, குளங்கள் வற்றிவிட்டது. தென் மேற்கு பருவமழை சீசன் துவங்கி யுள்ள நிலையில் மழை வரும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர்.

மழை வருமான என காத்திருந்த விவசாயிகளுக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வெறும் சூறைகாற்றே வீசி வருவதால் மழை பெய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கருதுகின்றனர். இந்த வருடமாவது மழை வருமா அல்லது மழை தள்ளி போகுமா என விவசாயிகள் பெரும் கவலை அடைந்து மழையை எதிர்பார் த்துள்ளனர். தென்மேற்கு பருவழை சீசன் துவங்கி உள்ள நிலையில் தற்போது வரை கண்ணா மூச்சி காட்டி வரும் நிலையில் தான் பருவமழை உள்ளது என டெல்டா பாசன விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். காலையில் குளிர்ந்த காற்றும், மதியம் முதல் மாலை வரை அனல் காற்றும் வீசி வருகின்றது. மழை பெய்யாததால் விவசாயிகள் உழவு பணி செய்ய முடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...