×

அரியலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு பொதுமக்கள் கடும் அவதி புகார் அளிக்க முயன்றால் மி.வா எண் பிசி

அரியலுார், ஜூன்12: அரியலுார் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அக்னிநட்சத்திரம் முடிந்த பின்பும் அதிக வெப்பம் இருந்துவருகிறது. இதனால் கோடையில் மின் தேவைஅதிகம் ஏற்படுகிறது.மின் விசிறி, பிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர், ஏர் பேன் போன்றவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. மின்மிகைமாநிலமாக தமிழகம் திகழ்வதாக அரசு அறிவித்துள்ள நிலையில் அரிய லுார் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் மின்வாரியம் மூலம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் திடிரென மின்வெட்டு ஏற்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்க முயன்றால் பலமணி நேரம் மின்வாரிய எண்.பிசியாக இருந்து வருகிறது. பொதுமக்கள் புகாரை கண்டுகொள்ளாமல் பராமரிப்பு என்ற பெயரில் திசைதிருப்பப்பட்ட தகவல்கள் தரப்படுகிறது. மின் தடை குறித்து முன் கூட்டியே குறுந்தகவல்களும் வருவதில்லை. ஏற்கனவே ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் நகர்புற சிறுதொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் மேலும் இது போன்ற அறிவிக்கப்படாத மின் தடைகாரணமாக வணிக நிறுவனங்களும் அதை சார்ந்த நுகர்வோரும் கடுமையான பாதிப்புக் குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
பொதுமக்கள் தங்கள் வேலைகளை திட்டமிட்டபடி செய்யமுடியாமலும், வெயில் கொடுமையைசமாளிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவியர்கள் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும் மின் தடைகாரணமாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு ள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து புகார் அளிக்க முயன்றால் பலமணி நேரம் மின்வாரிய எண்.பிசியாக இருந்து வருகிறது. பொதுமக்கள் புகாரை கண்டுகொள்ளாமல் பராமரிப்பு என்ற பெயரில் திசைதிருப்பப்பட்ட தகவல்கள் தரப்படுகிறது.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் செந்துறையில் 100...