பெரம்பலூரில் லாரி மீது கார் மோதி முதியவர் பலி

பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூரில், லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். பொள்ளாச்சியிலிருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது, அவ்வழியே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சென்னை ஆலம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (63), இவரது உறவினர்களான கிருஷ்ணன் (65), இவரது மகன் காரை ஓட்டிவந்த முரளிதரன் (30), வேல்விழி (47) ஆகிய 4 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த நபர்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற கண்ணன் நேற்று காலை இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3 பேர் காயம் அதிகாரிகளின் மெத்தன போக்கால் காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு சரியான அளவில் குளோரினேசன் செய்த குடிநீரை மாவட்ட நிர்வாகம் விநியோகிக்க வேண்டும். ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் நகர்புற சிறுதொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் மேலும் இது போன்ற அறிவிக்கப்படாத மின் தடைகாரணமாக வணிக நிறுவனங்களும் அதை சார்ந்த நுகர்வோரும் கடுமையான பாதிப்புக் குள்ளாகியுள்ளனர்.

Tags : car crash ,Larry ,Perambalur ,
× RELATED டூவீலரில் சென்றவர் லாரி மோதி பலி