×

தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.18.35 லட்சம்

தஞ்சை, ஜூன் 12: தஞ்சை பெரிய கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.18,35,172 பெறப்பட்டன.
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் உலக அளவில் பிரசித்த பெற்றதாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் உள்ள உண்டியல்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று கோயில் அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மூலம் 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் எண்ணப்பட்டன. இதில் ரூ.18,35,172 பெரிய கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளது தெரியவந்தது.

Tags : Devotees ,Tanjore ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி